தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: சுஷ்மா சுவராஜ் குற்றச்சாட்டு

பெய்ஜிங்: தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி கடந்த 14ம் தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தி தகர்த்தது.  இதில் 350 தீவிரவாதிகள் பலியாகினர்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியுறவு துறை மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு சென்றுள்ளார்.  அவரை சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யீ வரவேற்றார்.  இந்த பயணத்தில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: இந்தியாவில் வருத்தமும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில் நான் சீனாவுக்கு வந்திருக்கிறேன்.  ஜம்மு மற்றும் காஷ்மீரில் எங்களது பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட மோசமான தீவிரவாத தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட மற்றும் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் நாடு வழங்கிய உரிமை மற்றும் பாதுகாப்பின் முடிவே தீவிரவாத தாக்குதல். தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: