காங்கிரஸ் 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 1 இடம்: ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், ஈஸ்வரன் கையெழுத்து

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடத்தை தொடர்ந்து கொமதேகவுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், ஈஸ்வரன் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட இடங்கள் ஒதுக்குவது குறித்து தோழமைக் கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பேச்சு நடத்தி வருகிறார். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் தேவராஜ், பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் நேற்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் குழுவினருடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஈஸ்வரன் கூறியது: திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம் பெற்றுள்ளது. 2 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. எங்களுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு முழு திருப்தி. உதயசூரியன் சின்னத் தில் நாங்கள் போட்டியிடுவோம். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம். இந்த தேர்தலில் திமுக கூட் டணி மகத்தான வெற்றி பெறும். 21 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: