கொடநாடு கொலை வழக்கு மார்ச் 4க்கு ஒத்திவைப்பு: குற்றவாளிக்கு பிடிவாரன்ட்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருேக கொடநாட்டில்  உள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி 11பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவிற்குள் சென்றனர். மேலும் அவர்கள் அங்கிருந்த சில விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊட்டி கோர்ட்டில் நடந்தது.  சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்படாததால் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. கடந்த 8ம் தேதி கோர்ட்டுக்கு வராத திபு மற்றும் பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கோவை சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். மனோஜ்சாமி மட்டும் வரவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கை வரும் மார்ச் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: