தை மாதம் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தால் என்ன?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தால் என்ன? என்று ஐகோர்ட் கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து பரிசீலனை செய்ய நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதி கோரிய பாலமுருகன் என்பவர் மனுவை விசாரித்த நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: