புதுக்காடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு : காலி குடங்களுடன் மக்கள் பரிதவிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரைஅருகே உள்ளது புதுகாடு. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்துவருகின்றனர். மேலும், இக்கிராமத்தின் கிழக்குபகுதியில்சுமார்50 வீடுகள் ஆங்காங்கே விவசாயநிலங்களில் உள்ளது. இவர்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குடிநீர் சப்ளைக்காக ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடைக்கு முன்பே கடும் வறட்சி நிலவி வருவதால் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் வறண்டு போய் காணப்படுகிறது. கைபம்பில் காற்று மட்டுமே வருகிறது. இதனால், குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

காலி குடங்களுடன் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். காலை எழுந்ததும் தண்ணீர் பிடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. இதனால், குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. மேலும், வேலைக்கு செல்வோரையும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்பி வைக்க முடியாமல் சித்திற்குள்ளாகி வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டாரவளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: