பழிக்குப்பழி வாங்குவோம்: சிஆர்பிஎப் வீரர் கணேஷ்குமார் ஆவேசம்

அரியலூர்: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பலியான சிவசந்திரனுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 92 பட்டாலியன் ஏ செக்‌ஷன் பிரிவில் பணியாற்றுபவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார். இவர் காஷ்மீரில் இருந்து அரியலூர் மாவட்டம் கார்குடிக்கு வந்து சிவசந்திரன் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:விடுமுறை முடிந்து காஷ்மீர் திரும்பிய வீரர்களை 78 வாகனங்களில் ஏற்றி ெகாண்டு சென்றபோது பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் அருகே தீவிரவாத தாக்குதல் நடந்தது. குண்டு துளைக்காத வாகனத்தில்தான் வீரர்கள் வழக்கமாக அனுப்பப்படுவார்கள். ஆனால் அன்றைய தினம் வாகன பற்றாக்குறையால் பட்டாலியனில் இருந்த அனைத்து வாகனங்களையும் வரவழைத்து வீரர்களை அனுப்பினர். பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் பழிக்கு பழி வாங்குவோம். காஷ்மீரில் சில பகுதிகளில் இன்றைக்கும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதனால் நாட்டை பாதுகாக்கும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: