கோபி: பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடக்கும்போது தேவையான பாதுகாப்பு, கேள்வித்தாள், மதிப்பெண் வழங்கும் முறை குறித்த விதிமுறை வெப்சைட் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதன்மூலம், கேள்விகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.