விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம் காங். கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று தமிழக  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், வெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர்கள் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர்,  ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செயல் தலைவர்கள் வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன்  குமாரமங்கலம், முன்னாள் எம்பிக்கள் விஸ்வநாதன், ராணி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், ரூபிமனோகரன்  உட்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அதற்காக செய்ய  வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

 கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி வலுவான நிலையில் உருவாகி இருக்கிறது. 39 தொகுதிகளிலும் வெற்றிபெற  கடுமையாக உழைக்கவேண்டும். ராகுல்காந்தியை பிரதமர் பதவியில் அமர வைக்க வேண்டும்.   விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மோடி அரசு  தயாராக இல்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, விவசாய பொருட்களுக்கு உரிய விலை வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கு வட்டியுடன் நிலுவை  தொகை வழங்குவது போன்றவற்றை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு கருப்பு  கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: