நத்தம் அருகே புனித செபஸ்தியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டியுள்ளது. புகையிலைப்பட்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

வடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். அதேசமயம் சில காளைகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, தங்கக்காசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு பொடியை ஏராளமான மக்கள் உற்சாகத்தோடு கண்டு ரசித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: