மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி ரூ.21 கோடி புத்தகங்கள் விற்பனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் ₹21 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கமாகும். இந்த ஆண்டு கண்காட்சி கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு அல்லது மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடு மற்றும் அதன் மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அந்த நாட்டின் பெயர் கண்காட்சியின்  கருப்பொருளாக அறிவிக்கப்படும். இதன்படி இந்த ஆண்டு நடந்த 43வது புத்தக கண்காட்சியின் கருப்பொருளாக கவுதமாலா நாடு அறிவிக்கப்பட்டு இருந்தது.12 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சி தொடங்கியதில் இருந்து 23லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்த ஆண்டு கண்காட்சியில் ₹21 கோடி மதிப்புள்ள புத்தகங்கள்  விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் ₹1 கோடி அதிகமாகும்.

இது தொடர்பாக பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர் சங்கத்தின் பொது செயலாளர் திரிதிப் சட்டர்ஜி கூறுகையில், “ ரஷ்யாவை சேர்ந்த எழுத்தாளர் பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்றனர். 2019ம் ஆண்டு  கொல்கத்தாவின் 44வது ஆண்டு புத்தககண்காட்சியின் கருப்பொருளாக ரஷ்யா இருக்கும்” என்றார்.கண்காட்சியில் புத்தகங்களை வாங்கியவர்களில் 4 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு புத்தக அலமாரி பரிசாக வழங்கப்பட்டது. இந்த புத்தக அலமாரியில் ரூ.1லட்சம் மதிப்புள்ள பல்வேறு வகையான புத்தகங்கள்  இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: