சென்னை: தமிழக காவல்துறைக்காக பட்ஜெட்டில் ரூ.8,084 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கணினி இணைப்பு திட்டத்தால் காவல்துறை நவீனமாயக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும் காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.