இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார் : உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்

நீலகிரி: குன்னூரில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்டில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து உடுமலை கவுசல்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவக்கொலையால் கணவனை இழந்த கவுசல்யாவிற்கு மத்திய அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்கியது.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கன் கண்டோன்மெண்டில் இளநிலை உதவியாளராக  கவுசல்யா பணிபுரிந்து வந்தார். அண்மையில் கோவையில் செயல்படும் நிமிர்வு கலையகம் என்ற அமைப்பில் பறை இசை கலைஞராக இருந்த சக்தி என்ற இளைஞரை கவுசல்யா இரண்டாவது திருமணம் செய்தது பெரும் சர்ச்சையானது. பல்வேறு புகார்களின் காரணமாக சக்தி மற்றும் கவுசல்யா இருவரும் நிமிர்வு கலையகம் அமைப்பிற்கு வர தடைவிதிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு வேளையில் இருந்தும் கவுசல்யா தற்காலிகமாக இழந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: