கவுதமாலா நாட்டு தூதராக குமரியை சேர்ந்தவர் நியமனம்

நாகர்கோவில்: கவுதமாலா நாட்டு மத்திய அமெரிக்காவின் தூதராக குமரியை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் முபாரக். இவரது தந்தை பாவா சாகிப். தாயார் மும்தாஜ். முபாரக் சவுதி அரேபியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். தற்போது மத்திய அரசு முபாரக்கை மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவின் தூதராக நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கவுதமாலா அதிபர் இந்திய அரசின் ஆணையை பெற்றுக் கொண்டு முபாரக்கை பொறுப்பேற்க வைத்தார். பதவி ஏற்கும் முன் சொந்த ஊர் வந்த முபாரக்கை  சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழ்சங்கம் சார்பில் அதன் தலைவர் பாவலர் சித்திக் சால்வை அணிவித்து பாராட்டினார். முபாரக்கின் சகோதரர் முஹாஜிர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: