நாளை காந்தியடிகள் நினைவு நாள்: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: காந்தி நினைவு நாளான ஜனவரி 30 (நாளை) மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள், நாடு முழுவதும் பிப்ரவரி 2-ம் தேதி கொண்டாடப்பட்டு  வருகிறது. காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30 (நாளை) மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என கன்னியாகுமரி  மாவட்டத்தை சேர்ந்த ரதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளை மூடியது தொடர்பாக பிப்ரவரி 18-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும்  ஆணையிட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் மதுக்கடை முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 4,800க்கும் மேற்பட்டமதுக்கடைகள் உள்ளன. அதில் சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல்  ரூ.85 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, மதுக்கடை வருவாய் ரூ.80 கோடி நாளை அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: