மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீரரான ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்) நேற்று மோதிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்களிலும் நடாலின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 6-3, 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.