இந்திய முதலீட்டாளர்களுக்கு முதன் முறையாக துபாயில் வாய்ப்பு

துபாய்: இந்திய முதலீட்டாளர்கள் துபாயில் தொழில் தொடங்க முதன் முதலாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தொழில் முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை  நடத்தி வருகிற்து. தற்போது இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஏப்ரலில் துபாயில் நடைபெற உள்ளது. முதன் முதலாக  இம்மாநாட்டில்  கலந்து கொள்ள இந்தியாவின் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.துபாய் எய்ம் ஸ்டார்ட் அப்ஸ் என்பது யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் பொருளதார அமைச்சகம் ஏற்பாடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச  முதலீட்டாளர்களின் மாநாடு. இந்திய தொழில் முனைவோர்களின் கண்காட்சி கடந்த 23ம் தேதியிலிருந்து அரபு  குடியரசின் 15 நகரங்களில் நடந்து வருகிறது.

 இதன் இறுதி கண்காட்சி மும்பையில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் இந்திய தொழில் முனைவோர்கள் இந்த ஆண்டு துபாயில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கு பெறும் வாய்ப்பை பெறுவர். இம்மாநாட்டில்  இந்திய தொழில் முனைவோர்களின் அமைப்பு பங்கு பெறுவதற்கான ஏற்பாட்டை கிரெக்ஸ் என்ற நிறுவனம் செய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: