ரஞ்சி அரையிறுதி கேரளா அணியை சுருட்டிய உமேஷ் யாதவ்

வயநாடு: ரஞ்சிக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் அரையிறுதிப்போட்டி கேரள மாநிலம் வயநாட்டில்  கேரளா- விதர்பா அணிகளுக்கு இடையில் நடைப்பெற்றது.   டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால  முதலில் களமிறங்கிய கேரளா அணி  விதர்பா அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 28.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சச்சின் பேபி  22 ரன்களும்,  விஷ்ணு வினோத் 37 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அற்புதமாக பந்து வீசிய விதர்பா அணியின்  உமேஷ் யாதவ்  12 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

ரஜினீஷ் குர்பானி 11.4 ஓவர்கள் வீசி 38 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் தொடர்ந்து ஆடிய விதர்பா  அணியின் கேப்டன் பயஸ் பாசில் 75 , சஞ்ஜெய் ராமசாமி 19, வாசிம் ஜாபர் 34,  அதர்வா  23 ரன்களையும் எடுத்தனர். நேற்று மாலை ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி  45 ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. சார்வாட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.பெங்களூரில் நடைப்பெற்ற இன்னொரு அரையிறுதிப் போட்டியில்  கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதின.  கர்நாடகா அணி நேற்று மாலை ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது.

 சீனிவாஸ் சரத் 74 ரன்களுடனும், ரோனீத் மோரே  ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா தரப்பில்  ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட்களையும்,  மக்வானா 3 விக்கெட்களையும்,   சக்காரியா, தர்மேந்திரசின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: