பாக்.கில் லாரி - பஸ் மோதிய விபத்தில் 27 பேர் பரிதாப பலி

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆயில் டேங்கர் லாரியும் பஸ்சும் மோதிய விபத்தில் 27 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பங்கூர் நோக்கி 40 பயணிகளுடன் ஒரு பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்றது. பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லா மாவட்டத்தை கடந்தபோது, எதிரே வந்த ஆயில் டேங்கர் லாரியுடன் பஸ் பலமாக மோதியது.

இதில் டீசல் நிரம்பிய டேங்கர் லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ பரவியதில் பஸ்சும் தீப்பிடித்தது. அதில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக தப்பி குதிக்க முயன்றனர். ஆனால், ஜன்னல் சிறியதாக இருந்ததால் அவர்களால் வௌியேற முடியவில்லை.

தீயில் சிக்கி 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேரில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். போதிய ஆம்புலன்ஸ் இல்லாததால் காயமடைந்தவர்கள் நீண்ட நேரத்துக்கு பின்னரே கராச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட சடலங்கள் யாரென்று அடையாளம் தெரியாத அளவுக்கு தீயினால் கருகி இருந்தன என்று தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: