பா.ஜ கூட்டணியில் அதிமுக இணையும்- மத்திய அமைச்சர் பேட்டி

புதுச்சேரி: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துள்ளதால், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையும். தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை தினகரன் அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும். இதுதொடர்பாக அவரை சந்தித்து வலியுறுத்துவேன்.  

இவ்வாறு அத்வாலே தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: