மூவரசன்பட்டு கங்கா நகரில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்: தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

ஆலந்தூர்: ஆலந்தூர் அடுத்த மூவரசன்பட்டு, கங்காநகரில்  திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம்  நடந்தது.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பரங்கிமலை ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் மு.ரவி, மூவரசன்பட்டு திமுக செயலாளர் ஜி.கே.ரவி,  ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வி.பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்கள் பிரசாந்த், பாபு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மூவரசன்பட்டு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், குளம், ஏரிகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்னை, குப்பையை உடனுக்குடன் அள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை  கொடுத்தனர்.

அப்போது தா.மோ. அன்பரசன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கோகுலம் நகரில் ₹20 லட்சத்தில் கான்கிரீட் சாலை, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ராகவா நகரில் சாலை, ₹20 லட்சத்தில் 3  கல்வெட்டுகள், சுப்பிரமணி நகரில் சிமென்ட் சாலை, சபாபதி நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நூலகத்திற்கு சுற்றுச்சுவர் என ₹60 லட்சத்தில் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மூவரசன்பட்டை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள குளம் சீரமைக்கப்படும். காரியமண்டபம், ராகவாநகர், கங்காநகர் பகுதிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும். எனவே, உங்களுக்காக பாடுபட்டு வரும் திமுகவுக்கு வரும் தேர்தல்களில் வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கூட்டத்தில், முன்னாள் திமுக கிளை செயலாளர் எம்.கே.பழனி,  நலச்சங்க கூட்டமைப்பை சேர்ந்த பாபு, பால்ராஜ், கண்ணன், ஸ்ரீதர், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: