கார் விபத்தில் உயிர் தப்பினார் இங்கி. இளவரசர்

லண்டன்:  இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (97). இவர் நேற்று கிழக்கு இங்கிலாந்தின் சண்டிங்கம் எஸ்ேடட் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மெயின்ரோட்டை நோக்கி சென்ற அவர் கார் மீது எதிரே வேகமாக வந்த மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் இளவரசர் ஓட்டிச்சென்ற கார் ரோட்டில் கவிழ்ந்தது. எதிரே வந்த காரில் இருந்த 2 ெபண்கள் காயம் அடைந்தனர். இளவரசர் பிலிப் காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த பெண்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வீடு திரும்பினர். இந்த விபத்தை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: