கோவையில் உயர்மின்கோபுரங்கள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதங்களில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைக்காமல், சாலையோரத்தில் புதைவடக் கம்பிகள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல வலியுறுத்தி வந்தனர். இதற்காக கோவை, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் சென்னைக்கு சென்று மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், முத்துக்கவுண்டனுர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உயரமின்கோபுரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வந்த நிலையில், மின்கோபுரம் அமைப்பதற்கான பணிகளை துவக்கியதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: