பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது

மதுரை: உழவர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் 2வது மிகப்பெரிய ஜல்லிக்கட்டு என பெயர் பெற்ற, பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.15 மணிக்கு துவங்கியது. கலெக்டர் நடராஜன் கொடியசைத்து  துவக்கினார். மருத்துவ  பரிசோதனைக்கு பிறகு 988 காளைகள் களமிறக்கப்பட்டன.

855 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 846 பேர் உடல் தகுதி சோதனையில் தேர்வாகி களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை அடக்கும் வீரர்களுக்கு டூவீலர்கள், எல்இடி டிவி, ஆட்டுக்குட்டி, பசுங்கன்று, பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: