வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை அடக்கும் பணியில் மாடுபிடி வீரர்கள்: உற்சாகத்தில் அவனியாபுரம்

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கறே்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளை அடைக்க வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் காவல் ஆணையர் டேவிட் தேவ ஆசிர்வாதம், மாநகராட்சி ஆணையர் அனிஷ்சேகர் பங்கேற்றுள்ளனர். மேலும் வாடிவாகலில் இருந்து காளைகளை சேகரிக்கும் அடம் வரை 500 மீட்டருக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள் மாடுபிடி விரர்களிடம் சிக்காமர் துள்ளிப் பாய்ந்து ஒடுகின்றன. மேலும் அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 75 காளையர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: