டிசம்பரில் பண வீக்கம் குறைந்தது

புதுடெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த மாதத்தில் 2.19 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத சரிவாகும். முந்தைய மாதங்களில் பழங்கள், காய்கறிகள், எரிபொருள் விலை குறைந்ததே இதற்கு காரணமாகும். இந்த பண வீக்க விகிதம் கடந்த நவம்பரில் 2.33 சதவீதமாகவும், கடந்த 2017 டிசம்பரில் 5.12 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு  2017 ஜூன் மாதத்துக்கு பிறகு முதன் முறையாக பண வீக்க விகிதம் குறைந்துள்ளது. மொத்த விலை பண வீக்கமும் கடந்த டிசம்பரில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. இது 8 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். இதற்கு முந்தைய 2017ம் ஆண்டு டிசம்பரில் மொத்த விலை பண வீக்கம் 3.58 சதவீதமாக இருந்தது. டிசம்பரில் வெங்காயம் விலை 63.83 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: