அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவராக முன்னாள் நீதிபதி ராகவன் நியமனம்

மதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சரவணன், ஆனந்த், சந்திரசேகர் ஆகிய 3 வழக்கறிஞர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட கோரியும், அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகத் தங்களைச் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அதில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

இவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர். எனவே அனைத்துச் சமுதாயத்தினரையும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் சேர்க்கக் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, ஜல்லிக்கட்டு நடத்த ஒய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைத்து  உத்தரவிட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நிபந்தைகள்

ஆலோசனை குழுவினர் ஜல்லிக்கட்டு மேடையை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தைகள் விதித்துள்ளது. மேலும்  ஜல்லிக்கட்டு போட்டியில் எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்பட கூடாது என்று ஆணையிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: