சென்னை: பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.