7 தமிழர் விடுதலை விவகாரம் தமிமுன் அன்சாரி, தனியரசு வெளிநடப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) ஆகியோர் 7 தமிழர் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு சபாநாயகர்  தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யவேண்டும் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இதுவரை, 7 பேர் விடுதலை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதுதான் மரபு, அந்த மரபை கவர்னர் அவமதித்துள்ளார். 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக பேரவையில் பேச அனுமதி கேட்டோம், அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: