ஆளுநர் செயலரை பேரவைக்குள் அனுமதித்தது ஏன்? துரைமுருகன்; எதிர்காலத்தில் உரிய முறையில் கையாளப்படும்; சபாநாயகர்

சென்னை: ஆளுநரின் செயலரை சட்டப்பேரவைக்குள் அனுமதித்தது ஏன்? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது உரையாற்றிய அவர் அரசு செயலாளர்கள் கூட யாரும் அவைக்குள் நுழைந்துவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். அதை மீறி பேரவைக்குள் வந்தால் சட்ட ரீதியாக கைது கூட செய்யலாம் என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயலாளர் எப்படி சபாநாயகரான தங்களுக்கு நிகராக அமர்ந்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், இத்தகைய செயல் அவையின் மாண்பை குலைக்கும் வகையில் இருந்ததாக கூறினார். இதற்கு பதிலளித்த பேரவை தலைவர் தனபால் எதிர்காலத்தில் எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு இந்த மன்றம் கையாளும் என்று தெரிவித்தார். தனது அதிகாரத்திற்கு உட்பட்டே இதனை தாம் கையாண்டு கொள்வதாக சபாநாயகர் பதிலளித்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: