அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்பப்படும்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் தொகுதி திமுக எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரன் பேசும்போது, ‘‘அரசு பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க ேவண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘‘500 மாணவர்கள் படித்தால்தான் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த முடியும். ஆனால் இந்த பள்ளியில் 150 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். குறைவாக மாணவர்கள் உள்ளதால் பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த முடியாது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பேறுகால விடுப்பில் செல்வதால் அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான தடை உத்தரவு மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலி இல்லா நிலையை இந்த அரசு உருவாக்கி காட்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: