நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும், மகா கூட்டணிக்கும் இடையேயான போட்டி: பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு ராமர்கோவில் தொடர்பான அவசர சட்டம் பற்றி பரிசீலனை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இன்று சிறப்பு  பேட்டியளித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது என்றும் நாடாளுமன்ற தேர்தல் மக்களுக்கும், மகா கூட்டணிக்கும் இடையேயான போட்டி  என்று தெரிவித்தார்.

துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை; துல்லிய தாக்குதல் நடத்துவதை  2  முறை தள்ளி வைத்து இருந்தோம், ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன், எந்த ஒரு வீரரும் உயிரிழக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார். போரிடுவதால் பாகிஸ்தான் திருந்தும் என எண்ணுவது தவறு என்றும் தன்னை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு இன்னும் அதிக காலம் தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை, தமது ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே உர்ஜித் படேல் தெரிவித்தார் என்றும் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக  சிறப்பாக பணியாற்றினார் என்று பாராட்டு தெரிவித்தார். பண மதிப்பிழப்பு திடீரென கொண்டுவரப்பட்ட நடவடிக்கை அல்ல, ஓராண்டுக்கு முன்னதாகவே கருப்பு பணம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று  கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர் என்றார்.

சொனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்  என்றும் நாட்டின் முதல்குடும்பம் நிதி முறைகேட்டில் சிக்கி, தற்போது ஜாமீனில் உள்ளது என்றார். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியை முத்தலாக் அவசர சட்டம் இயற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: