ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்க்கை கோயிலில் பெண்களுக்கு புத்தாண்டு முதல் ஆடை கட்டுப்பாடு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்க்கை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு புத்தாண்டு முதல் ஆடை கட்டுப்பாடு நடைமுறை படுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்திர கீழாத்திரி குன்றின் மீது தொன்மை வாய்ந்த கனக துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் இருந்து பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகச் செயல் அலுவலர் கோடீஸ்வரம்மா தெரிவித்துள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆடைக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாகப் பெண்கள் சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளையே அணிந்து வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆடைக் கட்டுப்பாடு குறித்து அறியாமல் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு நூறு ரூபாய்க்கு அம்மா சேலை வழங்கப்படும் என்றும், சேலை அணிவதற்காக அவர்களுக்கு உடைமாற்றும் அறை வசதி செய்யப்படும் என்றும் செயல் அலுவலர் கோடீஸ்வரம்மா தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: