சியலா மார்க ஸ்டீபன் தூத்துக்குடி வந்தது ஏன்? அமெரிக்க பத்திரிக்கையாளரிடம் போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: எவ்வித முன்னறிவிப்புமின்றி அமெரிக்க பத்திரிக்கையாளர் சியலா மார்க ஸ்டீபன் தூத்துக்குடி வந்தது குறித்து அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் அமெரிக்க பத்திரிக்கையாளரான சியலாவின் வருகை போலீசாரை சந்தேகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவரிடம் பலமணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு ஏதும் பதியாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது எங்கு உள்ளார் என்று தெரியவில்லை. இதனிடையே தூத்துக்குடியில் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அன்னிய சக்திகள் ஊடுருவியிருப்பதாக வழக்கறிஞர் மக்கள் நல கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் விசாரணைக்கு உள்ளான அமெரிக்க பத்திரிக்கையாளர் சியலா மார்க் ஸ்டீபன் சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கைகளுக்கு எழுதி வருவது தெரியவந்துள்ளது. இதனால் அன்னிய சக்திகளின் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே சியலா உண்மையிலேயே எதற்காக இந்தியா வந்தார்? அதுவும் எவ்வித முன்னறிவிப்புமின்றி தூத்துக்குடி வந்தார் என்ற உண்மைகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் மக்கள் நல கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: