பாதயாத்திரை பாதையில் இருபுறமும் முட்செடிகள் இறங்கி போகும் பக்தர்கள்

*விபத்தில் சிக்கும் அபாயம்

ஒட்டன்சத்திரம் :  திண்டுக்கல்- பழநி இடையே பாதயாத்திரை பாதைகளில் இருபுறமும் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 கிமீ நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஜன.21ம் தேதி பழநி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவிற்கு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வர துவங்கி விட்டனர்.

சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்குவதை தடுப்பதற்காகவே இந்த நடைபாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது பக்தர்கள் மீண்டும் சாலையிலே நடந்து செல்கின்றனர். காரணம் நடைபாதையின் இருபுறமும் முட்செடிகள் காணப்படுவதால்தான். மேலும் நடைபாதையின் சில இடங்களில் கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனாலே பக்தர்கள் நடைபாதையை தவிர்த்து சாலையில் நடந்து செல்கின்றனர். இதன் காரணமாகவே விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதயாத்திரை நடைபாதையை ஆக்கிரமித்துள்ள முட்புதர், செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பக்தர்கள் இயற்கை உபாதைக்கு செல்ல தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: