லஜ்பத் நகர் - மயூர் விஹார் இடையே டிச.31 முதல் மெட்ரோ சேவை

புதுடெல்லி: பிங்க் வழித்தடத்தின் லஜ்பத் நகர் மற்றும் மயூர் விகார் இடையிலான மெட்ரோ சேவையின் அனைத்து சோதனைகளும் முடிவடைந்ததையடுத்து, டிசம்பர் 31ல் சேவை தொடங்கப்படுகிறது. டெல்லியில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து சேவையை எளிதாக்க மெட்ரோ விரிவாக்கப்பணிகளை டெல்லி மெட்ரோ நிறுவனம் விரைவுபடுத்தி வருகிறது.  இந்நிலையில் ஏற்கனவே பிங்க் வழித்தடத்தின் லஜ்பத் நகர் மற்றும் மயூர் விகார் இடையே பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிகட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாரானது. இதையடுத்து, 9.7 கி.மீ தூரமுள்ள இந்த புதிய வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனகளும் நடத்தி முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் திங்கட்கிழமை சான்று வழங்கினார். இதையடுத்து, வரும் டிசம்பர் 31ம் தேதி பிங்க வழித்தடத்தில் இந்த சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற  விவகாரங்கள் துறை தனிப்பொறுப்பு அமைச்சர் ஹர்திப் சிங் புரி மற்றும் மாநில  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இணைந்து 31ம் தேதியன்று காலை 11.00 மணிக்கு மெட்ரோ பவனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள நிகழ்ச்சியில் மெட்ரோசேவையை தொடங்கி வைக்கிறார்கள். அதே தினம் மாலை 4.00 மணிக்கு பயணிகளுக்கான முதல் சேவை அந்த வழித்தடத்தில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மஜ்லிஸ் பார்க் தொடங்கி ஷிவ் விகார் வரையிலான மெட்ரோவின் பிங்க் வழித்தட பேஸ் 3 பணிகள் 59 கி.மீ தொலைவுக்கு திட்டமிடப்பட்டது. அதில் வினோபாபுரி, ஆஷ்ரம், ஹஸ்ரத் நிஜாமுதீன், மயூர் விகார் பேஸ் 1 மற்றும் மயூர் விகார் பாக்கெட் 1 வரையிலான 9.7 கி.மீ தொலைவிலான இந்த 5 ஸ்டேஷன்களில் முதல் 3 ஸ்டேஷன் பூமிக்கு அடியிலும், மற்ற 2 ஸ்டேஷன் பூமிக்கு மேற்பரப்பிலும் அமைந்துள்ளது. மெட்ரோ பேஸ் 4ன் 103 கி.மீ தொலைவிலான விரிவாக்க பணிகளுக்கு மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கி முதல் தவணையாக ₹1,000 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பயணிகளுக்கான சேவைகளை அதிகரித்து செல்வது ஒரு பக்கம் தொடர்ந்தாலும், பயணிகளுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் நிர்வாகம் சமீபத்தில் டிவிட்டர் கணக்கு தொடங்கி குறைகளை கேட்டு வருகிறது. மேலும், மெட்ரோவின் சேவைகள் தேசிய தலைநகர் மண்டலங்களை உள்ளடக்கி உத்தர பிரதேசம் தொடங்கி டெல்லி வழியாக அரியானா வரை  பயணிகளுக்கு பயணம் விரைவானதாகவும், எளிமையாகவும் அமைந்துள்ளது. தினமும் 30  லட்சம் பேர் பயணிக்கும் மெட்ரோவின் ஆண்டு பயணிகள் எண்ணிக்கை சுமார் 120  கோடியாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: