குவாலியர்: சிதார் இசைக்கலைஞர் மஞ்சு மேத்தாவுக்கு தான்சேன் விருது வழங்கப்பட்டது.பிரபல இசைக்கலைஞர் தான்சென் நினைவாக, மத்திய பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் இசை திருவிழா நடத்தி வருகிறது. கடந்த 94 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இசை திருவிழா குவாலியரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 2018ம் ஆண்டுக்கான தான்சேன் விருதுக்கு சிதார் இசைக்கலைஞர் ஜெய்ப்பூரை சேர்ந்த மஞ்சு மேத்தா (74) தேர்வு செய்யப்பட்டார். விழாவில் அவருக்கு தான்சேன் விருதையும். ₹2 லட்சம் பரிசுத் தொகையையும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார். இசைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பல்வேறு விருதுகளை பெற்ற மஞ்சு, பிரபல மறைந்த சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் மாணவி.