மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை உச்ச நீதிமன்றத்தில் பாஜ வழக்கு: அவசரமாக விசாரிக்க பதிவாளர் மறுப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்ட ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜ சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரசாரத்துக்காக ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில்  பாஜ சார்பில் நாடு முழுவதும் வலம் வரும் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இந்த யாத்திரை 3  மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 7ம் தேதி முதல் யாத்திரை கூச்பீகார் மாவட்டத்தில் தொடங்க இருந்தது.இதற்கிடையே, யாத்திரை நடத்தினால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து பாஜ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  மனுவை விசாரித்த ஒரு நீதிபதி கொண்ட அமர்வு, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  திபசிஷ் கர்குப்தா தலைமையிலான டிவிசன் பெஞ்ச் மனுவை விசாரித்து, அனுமதியை ரத்து செய்ததுடன், ஒரு நீதிபதி கொண்ட அமர்வு உளவுத் தகவல்களை கேட்டு, மீண்டும் இவ்வழக்கை புதிதாக விசாரித்து விரைவில்  முடித்து வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜ சார்பில் வக்கீல் மகேஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுமுறைகால மனுவை நேற்று தாக்கல் செய்தார். வரும் 1ம் தேதி வரை உச்ச  நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரும் இம்மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு, வழக்கமான  நடைமுறையில்தான் விசாரிக்கப்படும், அவசர வழக்காக விசாரிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: