பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் : பென் கட்டிங் அதிரடி வீண்

கான்பெரா : பிக் பாஷ் டி20 லீக் தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது. கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீசியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானதால் தலா 19 ஓவர் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். ஹோபர்ட் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. தொடக்க வீரர் டார்சி ஷார்ட் அதிகபட்சமாக 67 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். மெக்டெர்மாட் 25, பெய்லி 22, மிலென்கோ 18* ரன் எடுத்தனர்.

பிரிஸ்பேன் பந்துவீச்சில் முஜீப் உர் ரகுமான், மார்க் ஸ்டெகடீ தலா 2, ஜோஷ் லலோர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 18.4 ஓவரில் 144 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிரையன்ட் 30 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் கிறிஸ் லின் 29 ரன் எடுத்து வெளியேறினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, உறுதியுடன் போராடிய பென் கட்டிங் 58 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் பந்துவீச்சில் பெய்லி வசம் பிடிபட்டார். ஹோபர்ட் பந்துவீச்சில் பாக்னர் 3, ஆர்ச்சர், போத்தா, மெரடித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷார்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஹோபர்ட் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: