கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று முன்னாள் அதிபர் ஒபாமா இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். வரும் 25-ம் தேதி

கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ள நிலையில், அமெரிக்க நாட்டின் தலைநகரமாக வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு முன்னாள் அதிபர் ஒபாமா திடீர் வருகை தந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவுடனும், மூட்டை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்த ஒபாமாவைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மருத்துவமனை என்றும் பாராமல் ஆராவாரித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்ட ஒபாமா அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். ஒபாமாவை அரவணைத்த குழந்தைகள், நடப்பதை நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போயினர். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: