தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வர வில்லை...... கஜா புயல் குறித்த கேள்விக்கு ஹெச்.ராஜா மழுப்பல்

கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை என சர்ச்சைக்குரிய முறையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலினால் பெரும் சேதத்தை சந்தித்தன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்றுவரை சந்திக்கவில்லை. அவர்களுக்கு பிரதமர் என்ற முறையில் ஆறுதல் கூட அவர் தெரிவிக்கவில்லை. அவரது இந்த செயல் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இதன் மூலம் தமிழக மக்களை மோடி புறக்கணிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேசமயம் தமிழக பாஜக தலைவர்களோ, மத்திய அரசு எப்போதும் தமிழகத்திற்கு பக்க பலமாக இருக்கும் என பேசி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜகவின் அணுகுமுறையோ அவ்வாறு இல்லை என்பதே நிதர்சனம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,  கோவையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் ஏன் வரவில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நேரடியாக பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தியை திமுக அழைத்தது குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சி சரி இல்லை என்பதால்தானே பாஜகவுக்கு வாய்ப்பளித்தார்கள், உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறுங்கள் என கேட்டார். அதற்கு ஹெச்.ராஜா உடனடியாக, தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை என பதிலளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: