திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா : பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

திருவையாறு: திருவையாறில தியாகராஜர் ஆராதனை விழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 172வது ஆராதனை விழா ஜனவரி 21ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சங்கீத வித்வான்கள் திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவில் பங்கேற்று அவரது கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்துவர். தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 25ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துவர். அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

இந்நிலையில் நேற்று 172வது ஆராதனை விழா பந்தகால் முகூர்த்தம் நடும் விழா அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார், டெக்கான் மூர்த்தி, பஞ்சநதம், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், ரவிச்சந்திரன் மற்றும் சபா நிர்வாகிகள் பங்கேற்றனர். 172வது ஆராதனை விழா ஜனவரி 21ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகிக்கிறார். விழாவை கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை கலைஞர் பத்மபூசன் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். சபை அறங்காவலர்கள் குழுத்தலைவர் ஜி.கே.வாசன், கலெக்டர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: