ரூ.3.6 லட்சம் கோடி நிதி : அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்குமா?

மும்பை: ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் போர்டு கூட்டம் நேற்று நடந்தது. கவர்னர் பதவியை  உர்ஜித் படேல் ராஜினாமா செய்தபின், சக்திகாந்த தாஸ் தலைமையில் கூடிய முதல் கூட்டம் இது.   பொருளாதார சூழ்நிலைகள், வங்கிகள் செயல்பாடுகள், நிதி, கடன்கள், பணவீக்க நிலை ஆகியவை குறித்து பொதுவான அலசல் நடந்தது. பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இப்போதுள்ள நிதி, பொருளாதார சவால்கள் குறித்து  பேசப்பட்டது. எந்த  முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.   

ரிசர்வ் வங்கி தன்னாட்சி மிக்க உயரிய நிதி அமைப்பு. பணவீக்கம், நிதி நிலைமை, வங்கிகள் செயல்பாடு, வட்டிவிகித மாற்றங்களை கவனிப்பது, அன்னிய செலாவணியை கையாள்வது, ஜிடிபியை நிலைநிறுத்துவது என்று பல விஷயங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.   அவ்வப்போது மத்திய அரசின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்ளும் அமைப்பு என்றாலும், அதன் தன்னாட்சி நிர்வாகத்தில் அரசே தலையிட முடியாது. அப்படி தான் இதுவரை செயல்பட்டு வந்தது.   எனினும், ரகுராம் ராஜன் , ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோதுதான் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் மோதல் ஏற்பட்டது.  கருத்துவேறுபாடு காரணமாக  அவர் வெளியேறினார். அதன் பின், ஆளும் பாஜவுக்கு நெருங்கியவர்  என்று பேசப்பட்ட உர்ஜித் படேல் கவர்னரானார்.   ஆனால், சமீபத்தில் அவரும் நிதி அமைச்சருடன் கருத்து வேறுபாடு காரணமாக விலக நேர்ந்தது. ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கிறது. அந்த பணத்தை அரசின் நிதி பற்றாக்குறைக்கு பயன்படுவதற்கு தருவதில் தான் சிக்கல் ஆரம்பித்தது.   இப்போதும் அந்த விவகாரத்தில் முடிவு காணவில்லை. நேற்று நடந்த போர்டு கூட்டத்தில் அது பற்றி ஆலோசிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: