1100 கோடி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்: ரேபரேலி தொகுதிக்கு மோடி நாளை பயணம்

லக்னோ: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் ரேபரலி மக்களவை தொகுதிக்கு நாளை செல்லும் பிரதமர் மோடி அங்கு ரூ.1100 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியாவின் தொகுதியான உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியை மோடி புறக்கணிப்பதாககாங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தொகுதியில் மேம்பாட்டு பணிகள் எதையும் மேற்கொள்வதில்லை எனவும் அந்த கட்சி குற்றம்சாட்டியது. எனவே வரும் மக்களவை தேர்தலில் ரேபரேலி மக்களின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக நிதியமைச்சர் அருண்ஜெட்லி எம்பி நிதியில் இருந்து நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.

 இந்நிலையில் காங்கிரசின் கோட்டையான ரேபரேலிக்கு நாளை பிரதமர் மோடி செல்கிறார்.

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டடத்தில் பங்கேற்கும் பிரதமர், ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பல்வேறு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.1100 கோடி அளவிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) செல்லும் பிரதமர் மோடி ஜனவரியில் தொடங்கும் கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து வரும் 29ம் தேதியும் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தலைவர் மகாராஜா சுகல்தேவ் ராஜ்பாரின் நினைவாக தபால் தலையை வெளியிடுகிறார். மேலும் காஜிபூர் உள்கட்டமைப்பு திட்டபணிகளுக்கான அடிக்கல்ைலயும் பிரதமர் அப்போது நாட்டுகிறார். பிரதமராக பதவியேற்ற பின் மோடி ரேபரேலி செல்வது இதுவே முதல்முறை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: