இந்தியாவின் ஏற்றுமதி 0.8 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 0.8 சதவீதம் அதிகரித்து 2,650 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 4.31 சதவீதம் அதிகரித்து 4,317ஆக உள்ளது. இதன்மூலம் வர்த்தக பற்றாக்குறை 1,667 கோடி டாலராக உயர்ந்துள்ளது என  வர்த்தக அமைச்சக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.தங்கம் இறக்குமதி 15.6 சதவீதம் குறைந்து 275 கோடி டாலராக உள்ளது. இருப்பினும் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - நவம்பர் வரை ஏற்றுமதி 11.58 சதவீதமும், இறக்குமதி 14.71 சதவீதமும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி 41.31 சதவீதம் உயர்ந்துள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: