ரிசர்வ் வங்கி அதிகாரம் குறித்து ஐஎம்எப் கருத்து

வாஷிங்டன்: ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் மிகவும் அவசியம் என ஐஎம்எப் இயக்குநர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம், சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக சர்ச்சைகள் எழுந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததும், அவரது இடத்தில் அந்த பதவிக்கு சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) இயக்குநர் ஜெரி ரைஸ்  கூறியதாவது: ரிசர்வ் வங்கிகளுக்கு (மத்திய வங்கிகள்) தன்னாட்சியுடன் செயல்பாடக்கூடிய சுதந்திரம் அவசியம் தேவை. சர்வதேச நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளின் செயல்பாட்டை பார்க்கும்போது, இந்த தன்னாட்சி அதிகாரமும் சுதந்திரமும் எவ்வளவு முக்கியம் என்பது அறிந்து கொள்ள முடிகிறது. இந்திய ரிசர்வ்வ ங்கி பொரளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: