அனுமதியின்றி காப்பீட்டுக்கு ரூ.12 பிடித்தம்; வங்கிக்கு ரூ.9 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி,. தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் கன்னியப்பன் (72). எஸ்பியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள ஒரு அரசு வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 11.06.2015ல் இவரது சேமிப்பு கணக்கிலிருந்து எவ்வித அனுமதியுமின்றி பிரதமரின் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.12 எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு கன்னியப்பன் கடந்த 12.05.2016 அன்று வக்கீல் மூலம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் 27.02.2016ல் அவரது கணக்கில் இருந்து மீண்டும் ரூ.12 எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கன்னியப்பன் தனது வக்கீல் மூலம் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி நாராயணமூர்த்தி விசாரித்து கன்னியப்பனுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் 6 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரமும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: