பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நிறைவு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. 7 பேர் கொண்ட குழு சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடுகள், பண்ணை வீடுகள்,  நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு  நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வசித்த போயஸ்கார்டன் வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், சகோதரர் திவாகரன், மற்றொரு சகோதரர் மகன் விவேக், சகோதரி மகன் தினகரன் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது உள்பட ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் விசாரணை நடத்தாமல் இருந்தனர்.

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்த விசாரணை நிறைவடைந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: