ராஜஸ்தானில் முதல்வர் பதவி யாருக்கு?...... அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே கடும் போட்டி

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள ராஜஸ்தானில் முதல்வர் பதவி பெற 2 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இப்போட்டியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அசோக் கெலாட்டுடன் இளம்தலைவர் சச்சின் பைலட் போட்டியிடுகிறார். முன்னிலை இருந்தாலும் சுயேட்சை ஆதரவை பெற்றால்தான் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சைகள் 14 பேர் முன்னிலையில் உள்ளனர்.

ராஜஸ்தானில்  ஆட்சியமைக்க சுயேட்சைகளிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 95 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ், 8 சுயேட்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சுயேட்சை வேட்பாளர்களுடன் காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல காங்கிரசுக்கு இணையாக பாஜகவும் முன்னேறியது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில், மதிய நிலவரப்படி காங்கிரஸ் 106 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 114 இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த நிலவரத்தில் அடுத்தடுத்து மாற்றம் ஏற்படுவதால், இழுபறி நீடிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: