கஜா புயல், பூச்சி தாக்குதலால் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் நாசம்: குவிண்டாலுக்கு 500 எகிறியது

கோவை: படைப்புழு தாக்குதல் மற்றும் கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர் நாசமாகியுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடவு செய்யப்பட்ட இப்பயிர் இந்த மாதம் இறுதி முதல் பிப்ரவரி வரை அறுவடையாகும். இதற்கிடையில்  கடந்த 2 மாதமாக நிலவிய படைப்புழு தாக்குதல் மற்றும் கடந்த மாதம் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் நாசமாகின. இதனால், மக்காச்சோளம் வரத்து பாதியாக குறைய  உள்ளதால், விவசாயிகளிடம் இருப்பிலுள்ள மக்காச்சோளத்துக்கு கிராக்கி ஏற்பட்டுளது. இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது:

மக்காச்சோளம் கடந்த ஜனவரி மாத அறுவடையின் போது ஒரு குவின்டால் ₹1,400க்கு விற்றது.

பின்னர் பிற மாநில வரத்து அதிகரித்ததால் விலை குவின்டாலுக்கு ₹100 குறைந்து ₹1,300க்கு விற்று வந்தது. கறிக்கோழி தீவனத்துக்காக பண்ணை யாளர்கள் மக்காச்சோளம் வாங்கி வருகின்றனர். 2 மாதங்களில் குவின் டாலுக்கு ₹500 உயர்ந்து ₹1,800க்கு விற்கப்படுகிறது  என்றனர்.இழப்பு அதிர்ச்சியில் விவசாயி பலி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மேலாண்மறை நாடு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (69)  விவசாயி. இவர்  5 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.   அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், படைப்புழு தாக்குதலில் மக்காச்சோளம் முழுவதும் நாசமானது. இதுபற்றி கடந்த மாதம் 30ம் தேதி குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்ற கவலையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: