வீரப்பனுக்கு சிம்ம சொப்பனம் மாஜி போலீஸ் அதிகாரி வெண்கல சிலை திறப்பு

மேட்டூர்:  சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் பணியாற்றி வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 1993ல் தமிழக-கர்நாடக வனப்பகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கண்ணி வெடியில் சிக்கி 24 காவலர்கள் உடல் சிதறி பலியானார்கள். இந்தச் சம்பவத்தில்  கோபாலகிருஷ்ணன், கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.     கடந்த 2008ல் டிஐஜியாக இருந்தபோது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து இளைஞர்களுக்கு காவல்துறையில் சேர பயிற்சி அளித்து வந்தார்.  

இந்நிலையில் 2016, ெசப்டம்பர் 11ம்தேதி,   உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.  அவரது 2ம்ஆண்டு நினைவு தினம் கடந்த செப்டம்பர் 11ம்தேதி அனுசரிக்கப்பட்டது. அப்ேபாது அவருக்கு 6அடி உயரத்தில் வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டு அவரது குடும்பத்தினர், அந்த சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களை தவிர யாரும் பங்கேற்கவில்லை. இந்த சிலையின் திறப்பு விழா, அவரது பிறந்த நாளான நேற்று நடந்தது. குடும்பத்தினர், சிலையை திறந்து வைத்தனர். அவரது தங்கை ரேணுகா, தம்பிகள் விஜயன், ஜாக் மற்றும் உடன் பணியாற்றிய அதிகாரிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: